விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படப்பிடிப்பு - புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படப்பிடிப்பு - புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு

விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்’ படப்பிடிப்பு - புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு
Published on

விஜய் ஆண்டனி நடித்துவரும் ‘ரத்தம்’ படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட் வெளியாகியுள்ளது.

‘கோடியில் ஒருவன்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன் 2’, ‘அக்னிச்சிறகுகள்’, ‘கொலை’, ‘மழை பிடிக்காத மனிதன்’, ‘ரத்தம்’ உள்ளிட்டப் படங்களில் செம்ம பிஸியாக நடித்து வருகிறார். இதில், ‘ரத்தம்’ படத்தினை ’சிரிப்பு. ஸ்மைலி’ என்றே இன்ஷியலை வைத்துவிடலாம் என எண்ணுமளவிற்கு ’தமிழ்படம்’, ‘தமிழ்படம் 2’ படங்களை இயக்கிய சி.எஸ் அமுதன் இயக்குகிறார் என்பதால் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. கமல் போரா, லலிதா தனஞ்செயன், B.பிரதீப் மற்றும் பங்கஜ் போரா ஆகியோர் தயாரிக்கின்றனர். புதிய களத்தில் திருப்பங்களுடன் கூடிய மாஸ் என்டர்டெய்னராக ’ரத்தம்’ படத்தை உருவாக்கியுள்ளார் சி.எஸ் அமுதன்.

மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா, ரம்யா நம்பீசன் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். மேலும், நிழல்கள் ரவி, ஜான் மகேந்திரன், கலை ராணி, மகேஷ், சுந்தர், மீஷா கோஷல் மற்றும் அமேயா ஆகியோருடன், ஸ்டாண்ட்-அப் காமெடியன் ஜெகன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கண்ணன் இசையமைக்க, கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், ‘தெருக்குரல்’ அறிவு ஒரு தீம் பாடலை எழுதியதோடு பாடியும் உள்ளார்.

இந்த நிலையில், ‘ரத்தம்’ படத்தின் கொல்கத்தா படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது. அதனை, உற்சாகமுடன் வீடியோவாகவும் வெளியிட்டுள்ளது படக்குழு. மேலும், வெளிநாட்டில் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டிய நிலையில், படத்தின் மற்ற பகுதிகளின் படப்பிடிப்பு ஏறத்தாழ நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com