’பீஸ்ட்’ கடைசிநாள் படப்பிடிப்பு: கலங்கிய நெல்சன்... கட்டி அணைத்துக்கொண்ட விஜய்
’பீஸ்ட்’ படத்தின் கடைசிநாள் படப்பிடிப்புத்தள புகைப்படம் வெளியாகியிருக்கிறது.
’மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார் விஜய். பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு உள்ளிட்டோர் இணைந்துள்ளார்கள். அனிருத் இசையமைகிறார். இப்படத்தின் முதற்கட்பட படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் ஜார்ஜியாவில் தொடங்கி தற்போது சென்னை கோகுலம் ஸ்டூடியோவில் இன்றுடன் நிறைவடைந்திருக்கிறது.
‘பீஸ்ட்’ படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பின்போது இயக்குநர் நெல்சன் திலீப் குமாரை விஜய் கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார். பதிலுக்கு நெல்சன் திலீப்குமார் கண்ணீரை அன்பாக வெளிப்படுத்தியுள்ளார். ”கடைசி நாள் படப்பிடிப்பில் அற்புதமான தருணம்” என்று படப்பிடிப்பு நிறைவடைந்த அப்டேட்டுடன் விஜய் - நெல்சன் கண் கலங்கும் புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.