விரைவில் ’விஜய் 67’ அறிவிப்பு... அக்டோபரில் படப்பிடிப்பு

விரைவில் ’விஜய் 67’ அறிவிப்பு... அக்டோபரில் படப்பிடிப்பு

விரைவில் ’விஜய் 67’ அறிவிப்பு... அக்டோபரில் படப்பிடிப்பு
Published on

’விஜய் 67’ படப்பிடிப்புக் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய்யின் 64 வது படமான ‘மாஸ்டர்’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார். விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா என பெரும் பட்டாளமே நடித்திருந்தனர். கடந்த ஆண்டு தீபாவளியையொட்டி தியேட்டர்களில் ‘மாஸ்டர்’ வெளியானது. கொரோனா சூழலிலும் தியேட்டர்களில் வெளியான படங்களில் ‘மாஸ்டர்’ மட்டுமே ‘ப்ளாக் பஸ்டர்’ வசூலைக் குவித்ததாக கூறப்படுகிறது. ‘மாஸ்டர்’ வெற்றியைத் தொடர்ந்து நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்த ‘பீஸ்ட்’ வெளியாகி கலவையான விமர்சனங்களைக் குவித்தது. இதனைத்தொடர்ந்து வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் ‘விஜய் 66’ படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்கும் ‘விஜய் 66’ பொங்கலையொட்டி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்த நிலையில், ‘விஜய் 66’ படத்தினை முடித்தப்பிறகு ’விஜய் 67’ படத்தில் லோகேஷ் கனகராஜ் படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படத்தினை செவன் கிரீன் ஸ்டுடியோவின் லலித்குமார் தயாரிக்க அனிருத் அல்லது சாம் சி எஸ் இசையமைப்பர் என்று சொல்லப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு அடுத்தமாதம் வெளியாகவுள்ளது என்று தகவல் வெளியாகவுள்ளது. கமல்ஹாசனின் ‘விக்ரம்’ வரும் ஜூன் 3 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு, முன்பாகவே ‘விஜய் 67’ படத்தின் அறிவிப்பு வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதம் துவங்கவுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com