’விஜய் 66’ படத்தை தயாரிக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு

’விஜய் 66’ படத்தை தயாரிக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு

’விஜய் 66’ படத்தை தயாரிக்கும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு

நடிகர் விஜய்யின் ‘விஜய் 66’ படத்தை பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார்.

‘மாஸ்டர்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் விஜய் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘பீஸ்ட்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வரும் நிலையில், அடுத்ததாக விஜய் தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தினை, பிரபல தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். வம்சி முதன்முறையாக இயக்குநராக அறிமுகமான பிரபாஸின் ’முன்னா’ படத்தை தில் ராஜுதான் தயாரித்தார்.

அதோடு, வம்சி இயக்கத்தில் வெளியான ராம் சரண் - அல்லு அர்ஜுனின் ‘யுவடு’ படத்தையும், மகேஷ் பாபுவின் ‘மகரிஷி’ படத்தையும் தில் ராஜுதான் தயாரித்தார். இந்த நிலையில், வம்சி இயக்கும் விஜய் படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார். இந்தப் படத்திற்காக விஜய்க்கு 120 கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் இணையும் ‘ராம் சரண் 15’ படத்தையும் தில் ராஜுதான் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. வம்சி ஏற்கனவே, கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தை இயக்கி இருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com