'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ்

'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ்
'சேது'வை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன்: விக்னேஷ்

 ’சேது’ படத்தை நினைத்து தினமும் வருத்தப்படுகிறேன் என்று நடிகர் விக்னேஷ் கூறினார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நாயகனாக நடித்தவர் விக்னேஷ். இவர் தனது 52-வது படமான ‘ஆருத்ரா’வில் கொடூரமான வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். 

இதுபற்றி அவர் கூறும்போது, பெரிய இயக்குனர்கள் படங்களில் நடித்தும் எனக்கென்று பிரேக் வரவில்லை என்கிற ஏக்கம் உண்டு. அதற்காக சோர்ந்து போய் விடவில்லை. சொந்தமாக தொழில் செய்து அதில் முன்னேறி இருக்கிறேன். பா.விஜய்யும் நானும் நண்பர்கள். ஒரு நாள் ஒரு கதையை சொல்லி நடிக்கக் கேட்டார். அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இவ்வளவு கொடூர வில்லனா என்று தயங்கினேன்.

’ஏன் தயக்கம். சித்தார்த் ஹீரோவாகவும் நான் வில்லனாகவும் நடிக்க இருந்த கதை இது. மிஸ்ஸாகி விட்டது. இப்ப நான் ஹீரோ, நீங்க வில்லன். இந்த படத்து மூலமா மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படணும்னு நினைச்சுதான் படத்தை எடுக்கிறோம். நீங்க நடிங்க. கெட்டவனா நடிச்சாலும் நல்ல பேர் கிடைக்கும்’ என்று சொன்னார். நடித்தேன். நல்ல பெயர் கிடைத்துள்ளது.

பாலாவின் ’சேது’ படத்தில் நான் நடிப்பதாக இருந்தது. அது மிஸ்ஸான காரணம் பற்றி கேட்கிறார்கள். அதை நினைத்து தினமும் வருத்தப் படுவேன். பாலாவும் நானும் அறை நண்பர்கள். பல பிரச்னைகளை சந்தித்ததால் நடிக்க முடியாமல் போனது. ஆனாலும் என் நண்பன் இன்றைக்கு வெற்றி பெற்று நிமிர்ந்திருப்பது பெருமையாக இருக்கிறது. ’சேது’ மாதிரி பாலுமகேந்திராவின் ’வண்ண வண்ணப் பூக்கள்’ படத்தில் இருந்தும் ஏழு நாட்கள் நடித்த பின் மாற்றப்பட்டேன். அந்த வலி இன்னும் இருக்கிறது. போராடிக் கொண்டே இருப்பேன். நிச்சயம் ஜெயிப்போம்’ என்றார்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com