இலவசமாக என் வலைத்தளத்தில் பகிர்கிறேன் : சிறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நடிகர் வித்யூத்

இலவசமாக என் வலைத்தளத்தில் பகிர்கிறேன் : சிறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நடிகர் வித்யூத்

இலவசமாக என் வலைத்தளத்தில் பகிர்கிறேன் : சிறு தொழிலாளர்களை ஊக்குவிக்கும் நடிகர் வித்யூத்
Published on

பிரபல திரைப்பட நடிகரான வித்யூத் ஜம்வால் தனது சமூக வலைத்தளங்களைப் பொருளாதார சேவைக்குப் பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

துப்பாக்கி, அஞ்சான் உள்ளிட்ட தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர் வித்யூத் ஜம்வால். இவர் இந்திப் படங்கள் மற்றும் சில மொழிகளிலும் நடித்துள்ளார். ஸ்டண்ட் கலைஞரான இவர் நடிகராகவும் திகழ்கிறார். கடந்த 2 மாதங்களாக சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தைச் செலவிட்டு வந்த இவர், தற்போது தனது சமூக வலைத்தள பக்கங்களைப் பொருளாதார சேவைக்காகப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், கொரோனா வைரசிலிருந்து அனைவரும் மீண்டு வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். வீடியோவில் தொடர்ந்து பேசியுள்ள அவர், “இந்த பொது முடக்கத்தில் எப்படி உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் உறுதியாக இருக்க வேண்டும் என சமூக வலைத்தள வாசிகளுக்குத் தெரிவித்து வந்தேன். அவர்கள் அதைப் பின்பற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

தற்போது பொருளாதார சேவை குறித்து சொல்லப்போகிறேன். நீங்கள் எந்தத் தொழில் தொடங்கினாலும், செய்தாலும் அல்லது பொருட்களை விற்றாலும் அதை https://www.actionherofilms.in இணையதளத்திற்கு அனுப்புங்கள். உங்கள் சேவை மீது எனக்கு நம்பிக்கை வந்தால், அதை நான் எனது சமூக வலைத்தள பக்கத்தில் இலவசமாகப் பகிருவேன்”எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com