’அசுரன்’ தெலுங்கு ரீமேக் ’நாரப்பா’ நேரடியாக ஓடிடியில் வெளியீடு: ரிலீஸ் தேதி அறிவிப்பு
தேசிய விருதுகளைக் குவித்த ‘அசுரன்’ படத்தின் தெலுங்கு ரீமேக் ’நாரப்பா’ நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ‘அசுரன்’ சூப்பர் ஹிட் அடித்ததோடு தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை குவித்தது. இப்படத்தின் தெலுங்கு ரீமேக் ‘நாரப்பா’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ஸ்ரீகாந்த் அடாலா. தெலுங்கு முன்னணி நடிகர் வெங்கடேஷ், பிரியாமணி உள்ளிட்டவர்கள் நடித்துள்ள ‘நாரப்பா’வைக் காண தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்ல. தெலுங்கில் அசுரனை எப்படி ரீமேக் செய்திருக்கிறார்கள் என்று பார்க்க தமிழ் ரசிகர்களும் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில், இப்படம், வரும் ஜூலை 20 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகும் என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அதேபோல, நடிகர் வெங்கடேஷ் நடித்துள்ள ’ த்ரிஷ்யம் 2’ படத்தின் ரீமேக்கும் ஓடிடியில் வெளியாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகின்றன என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.