\
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா தொற்று உறுதி
Published on

நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்த படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த அவர் 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில் பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com