“போர் குண்டுகளை எல்லாம் போட்டு பூமியில புதைச்சிடுங்க” - வடிவேலு ஆதங்கம் 

“போர் குண்டுகளை எல்லாம் போட்டு பூமியில புதைச்சிடுங்க” - வடிவேலு ஆதங்கம் 

“போர் குண்டுகளை எல்லாம் போட்டு பூமியில புதைச்சிடுங்க” - வடிவேலு ஆதங்கம் 
Published on
கொரோனா குறித்த விழிப்புணர்வு வீடியோவை நடிகர் வடிவேலு அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். 
தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, இன்று வெளியான தகவலில் இன்று மட்டும் தமிழகத்தில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரித்துள்ளது.
இந்தப் பாதிப்பு மே மாத மத்தியில் இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆகவேதான் மக்களிடம் விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக அரசு அதிக கவனம் எடுத்து வருகிறது. தனிப்பட்ட வகையில் திரை நட்சத்திரங்களும் மக்கள் மத்தியில் தங்களின் பங்களிப்பாகப் பல முன்முயற்சிகளை எடுக்க வேண்டி, தங்களின் கருத்துகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். 
இதனிடையே நடிகர் வடிவேலு, கொரோனா பாதிப்பு குறித்து வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “உண்மையில் போர்தான் நடந்துக் கொண்டிருக்கிறது.  எவன் பார்த்த வேலையோ? உசுரு எல்லாம் சாவனும்.. கட்டடம், காரு, வாசலு மட்டும் அப்படியே இருக்குமாம்..? அப்படி ஒரு செட் அப் பண்ணி இருக்காணுங்க. உலகத்துல இருக்குற போர் குண்டை எல்லாம் புதைச்சிடணும்? அதுவெல்லாம் நமக்குத் தேவையில்ல.  மனித நேயங்கள் ஒன்று சேரணும். மருத்துவ உலகம் தழைத்தோங்கி நிற்கணும். ஆனா மருத்துவ உலகமே திணறுகிறது. அவர்கள் சொல்வதை மட்டும் கேட்டால் போதும். இப்ப வீட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது. அவனும் வரக் கூடாதுனு சொல்லிட்டான். அவனவன் வீட்ல எல்லோரும் இருக்கணும்ணு சொல்லிட்டான். இந்தக் கோட்டைதாண்டி வரக் கூடாதுணு சொல்லிட்டான்.. இப்ப ரோட்டை தாண்டியும் வரக்கூடாதுணு சொல்லிட்டான். ஐய்யோ..! போச்சா.. போச்சா.. எல்லாம் போச்சா! என்னா? சேட்டை? கேட்க மாட்டேங்குதுங்க பய புள்ளைங்க?  இந்த நேரத்தை வைத்து நாம நம்ம பிள்ளைகளுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கணும்” எனக் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com