\
இன்று பூஜை... அடுத்தவாரம் படப்பிடிப்பு: வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ அப்டேட்

இன்று பூஜை... அடுத்தவாரம் படப்பிடிப்பு: வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ அப்டேட்

இன்று பூஜை... அடுத்தவாரம் படப்பிடிப்பு: வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ அப்டேட்
Published on

வடிவேலு நடிக்கும் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்குகிறது.

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு நடித்துள்ள திரைப்படம் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’. இந்தப் படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளியானது. அதன் பிறகு படத்தின் கதைக்கு நகைச்சுவையான திரைக்கதை அமைக்கும் பணிகளில் இயக்குனர் குழுவும், வடிவேலும் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருவதால், இந்தத் திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இந்த நிலையில் நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் இன்று நடந்து முடிந்துள்ளது. மேலும் படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை ஹைதராபாத்தில் அடுத்த வார இறுதியில் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

- செந்தில்ராஜா

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com