பூஜையுடன் தொடங்கிய வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு

பூஜையுடன் தொடங்கிய வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு

பூஜையுடன் தொடங்கிய வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படப்பிடிப்பு
Published on

நடிகர் வடிவேலுவின் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தின் பூஜை புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

சுராஜ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் வடிவேலு ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்திற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த செப்டம்பர் மாதம் வெளியானது. சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு நடிக்க வருவதால், இந்தத் திரைப்படம் எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்த நிலையில், ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ திரைப்படத்திற்கான பூஜை சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

பூஜையில் நடிகர் வடிவேலு, சுராஜ், சந்தோஷ் நாராயணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்தவாரம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com