’வைகைப்புயலை இயக்கும் கனவு நிறைவேறியது'- மாரி செல்வராஜ்

’வைகைப்புயலை இயக்கும் கனவு நிறைவேறியது'- மாரி செல்வராஜ்

’வைகைப்புயலை இயக்கும் கனவு நிறைவேறியது'- மாரி செல்வராஜ்
Published on

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘மாமன்னன்’ படத்தில் நடிகர் வடிவேலு இணைந்ததையொட்டி வடிவேலுவுக்கு பூச்செண்டு கொடுக்கும் புகைப்படத்தை உற்சாகமுடன் பகிர்ந்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

லைகா புரொடொக்‌ஷன் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் நடிகர் வடிவேலு தற்போது ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். அதேசமயம், நகைச்சுவைக் கதாபாத்திரங்களிலும் நடிக்கத் திட்டமிட்டிருக்கிறார். மாரி செல்வராஜ் - உதயநிதி இணையும் ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அடுத்ததாக, நெல்சன் இயக்கும் ‘ரஜினி 169’ படத்தில் நடிக்கவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது.

இன்று, ‘மாமன்னன்’ படத்தின் போஸ்டரில் வடிவேலுவின் பெயரை முதலில் போட்டு மரியாதை செய்திருந்தது படக்குழு. அதே உற்சாகத்துடன் வடிவேலுவுக்கு பூச்செண்டு கொடுக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து “நிறைவேறிய ஒரு தொடர் கனவு. மாமன்னனில் ‘வைகைப்புயல்’” என்று பதிவிட்டிருக்கிறார். இந்தப் புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com