\
காவலர் சீருடையில் அசத்தும் உதயநிதி.. நாளை வெளியாகும் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர்

காவலர் சீருடையில் அசத்தும் உதயநிதி.. நாளை வெளியாகும் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர்

காவலர் சீருடையில் அசத்தும் உதயநிதி.. நாளை வெளியாகும் ‘நெஞ்சுக்கு நீதி’ டீசர்
Published on

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.

அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிகிள் 15' தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.

’பிக்பாஸ்’ ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், நாளை மாலை 6.30 மணிக்கு டீசர் வெளியாகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com