உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்

உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை கொண்டாடி வருகிறார்கள் திமுகவினர்.

புதுக்கோட்டையில் உள்ள திரையரங்கு ஒன்றில் திமுகவின் இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை முன்னிட்டு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் முத்து ராஜா உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் கூட்டமாக வந்து அந்த திரைப்படத்தை கண்டு சென்றனர். அப்போது திரைப்படம் பார்க்க வந்தவர்களுக்கு புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா மரக்கன்றுகளை வழங்கி அதனை வளர்க்க வேண்டும் வேண்டுகோள் விடுத்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

இதேபோல், கரூரில் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்டத்தை பார்த்த பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. கரூர் கலையரங்க தியேட்டரில் இத்திரைப்படத்தை கரூர் மாநகரட்சி மேயர் கவிதா கணேசன் தலைமையில் திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் பார்த்தனர். முன்னதாக நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியானதை கொண்டாடும் வகையில், கரூர் மாவட்ட உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகிகள் ஏற்பாட்டில் பள்ளி மாணவர்களுக்கும், திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்கள் உள்ளிட்ட பொதுமக்களுக்கு மரக்கன்றுகளை மாநகராட்சி மேயர் கவிதா கணேசன், துணை தாரணி சரவணன் ஆகியோர் வழங்கினார்.

மேலும், தேனியில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை திமுக தேனி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்செல்வன் தலைமையில் திமுகவினர் ஏராளமானோர் மேளதாளங்களுடன் பட்டாசு வெடித்து திரைப்படம் பார்க்கச் சென்றனர். முன்னதாக தேனி கம்பம் சாலையில் இருந்து பூதிப்புரம் சாலையில் உள்ள வெற்றி சினிமாஸ் வரையில் ஊர்வலமாக வந்த வந்த திமுகவினர் பட்டாசு வெடித்தும், ட்ரம் செட் இசைத்து ஆரவாரத்துடன் திரையரங்கிற்கு திரைப்படம் பார்க்க சென்றனர்.‌இதற்காக 100 க்கணக்கான டிக்கெட் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல், நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் அவரது ரசிகர்களும் கட்சி தொண்டர்களும் பல்வேறு வாசகங்கள் அடங்கிய போஸ்டர்களை கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டியுள்ளது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.  இத்திரைப்படத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் வகையிலும், திரைப்படம் வெற்றியடைய கட்சி தொண்டர்களும் உதயநிதி ரசிகர்களும் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். போஸ்டர்களில் அக்கட்சி தொண்டர்கள் குறிப்பிட்டுள்ள வாசகங்கள் பல்வேறு தரப்பினரின் கவனத்தை பெற்றுள்ளது. ’சமூக நீதி பேசும் சின்னவரின் நெஞ்சுக்கு நீதி’, ’உதயநிதி ஆகிய நான் வழங்கும் நெஞ்சுக்கு நீதி’ , ’கலைஞர் ஐயாவின் பராசக்தி’, ’தளபதியாரின் ஒரே ரத்தம் வரிசையில்' போன்ற என்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com