\
உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’: படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்!

உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’: படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்!

உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’: படக்குழு வெளியிட்ட புதிய அப்டேட்!
Published on

உதயநிதியின் ‘மாமன்னன்’ படப்பிடிப்புக் குறித்த அப்டேட் கொடுத்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

‘பரியேறும் பெருமாள்’ மூலம் தமிழின் முன்னணி இயக்குநரானார் மாரி செல்வராஜ். அடுத்ததாக, அவர் இயக்கிய ‘கர்ணன்’ அடக்குமுறைகளுக்கு எதிராக வாள் ஏந்தி நின்றது. இரண்டு படங்களும் பாராட்டுக்களையும் விருதுகளையும் குவித்த நிலையில், நடிகர் உதயநிதியை வைத்து ‘மாமன்னன்’ படத்தை கடந்த மார்ச் 4 ஆம் தேதிமுதல் இயக்கி வருகிறார். உதயநிதியுடன் ஃபகத் ஃபாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். கடந்த மார்ச் 15 ஆம் தேதியிலிருந்து வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொண்டார். உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குநராக குமார் கங்கப்பன் பணியாற்றுகிறார். தீவிர அரசியலில் ஈடுபடவிருப்பதால் சினிமாவில் ’மாமனிதன்’ உதயநிதியின் கடைசிப் படம் என்று சொல்லப்படுகிறது.

அதனால், படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்திவருகிறது படக்குழு. தொடர்ந்து 25 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் தற்போது முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துள்ளனர். இதனை கேக் வெட்டிக் கொண்டாடும் புகைப்படத்தினைப் உற்சாகமுடன் பகிர்ந்துகொண்டுள்ளார் மாரி செல்வராஜ்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com