\
ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!

ஏ.ஆர் ரஹ்மான் இசையில் மாரி செல்வராஜுடன் இணையும் உதயநிதி ஸ்டாலின்!
Published on

‘கர்ணன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்குநர் பா.ரஞ்சித் தயாரிக்கும் துருவ் விக்ரமின் படம், தனுஷின் பெயரிடாதப்படம் ஆகிய இரண்டு படங்களை இயக்குகிறார். இந்தப் படங்களை முடித்தப் பிறகு உதயநிதியின் படத்தை இயக்குவதாகவும், இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மு.மாறனின் ‘கண்ணை நம்பாதே’, அருண்ராஜா காமராஜின் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக், மகிழ் திருமேனியின் பெயரிடாதப் படங்களில் நடித்துவரும் உதயநிதி, இப்படங்களை முடித்தப்பிறகு மாரி செல்வராஜ் படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டு உதயநிதி முழுநேரமாக அரசியலில் மட்டுமே கவனம் செலுத்தப்போகிறார் என்றும் சொல்லப்படுகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com