\
உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்

உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை கைப்பற்றிய பிரபல ஓடிடி தளம்
Published on

’நெஞ்சுக்கு நீதி’ படத்தினைக் கைப்பற்றிய ஓடிடி தளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

‘ஆர்டிகிள் 15’ ரீமேக்கான ‘நெஞ்சுக்கு நீதி’ உதயநிதி நடிப்பில் கடந்த 20-ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகி பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. போனி கபூர் தயாரித்துள்ள இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். உதயநிதியுடன் ஆரி, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், யாமினி சந்தர், சுரேஷ் சக்கரவர்த்தி, இளவரசன், மயில்சாமி, அப்துல் லீ, ராட்சசன் சரவணன் மற்றும் பலர் இணைந்து நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

போனி கபூரும் ஜீ ஸ்டுடியோஸும் தயாரித்துள்ள இப்படம் ‘ஆர்டிகிள் 15’ ரீமேக் என்பதால் ஏகப்பற்ற எதிர்பார்ப்புகளைக் கிளப்பியது. அத்தனை எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றியுள்ளார் அருண்ராஜா காமராஜ் என்பதற்கு சாட்சியாய் பாராட்டுக்களாய்க் குவியும் விமர்சனங்களே சாட்சி. 

முதல்வர் மு.க ஸ்டாலின், லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ், மாரி செல்வராஜ் என பலரும் படத்தைப் பார்த்துவிட்டுப் பாராட்டினார்கள். இந்த நிலையில், ‘நெஞ்சுக்கு நீதி ‘ படத்தின் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகான டிஜிட்டல் உரிமையை சோனி லைவ் கைப்பற்றியிருப்பதாகவும் சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவி கைப்பற்றியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. படம் வெளியாகி 30 நாட்கள் கழித்து வரும் ஜூன் 19 ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com