கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக மாறிய நடிகர்

கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக மாறிய நடிகர்

கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக மாறிய நடிகர்
Published on

சுபாஷ் சந்திர போஸ் கெட்டப்பிற்காக தனது உடல் எடையை கூட்டியுள்ள ராஜ்குமார் ராவ்வின் புகைப்படத்திற்கு சமூக வலைத்தளத்தில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்திய சுதந்திர போராட்ட வீரர்களில் முக்கியமானவர் சுபாஷ் சந்திர போஸ். இவரது வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் சுபாஷ் சந்திர போஸ் வேடத்தில் நடிகர் ராஜ்குமார் ராவ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சுபாஷ் சந்திர போஸ் கெட்டப்பிற்காக தனது உடல் எடையை வெகுவாக கூட்டியிருக்கிறார் ராஜ்குமார் ராவ். வயிற்றை அதிகமாக கூட்டி அவர் வெளியிட்டிருக்கும் ட்விட்டர் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏராளமானோர் அவரின் புகைப்படத்தை தங்களது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர். " ஒருவரின் கதாபாத்திரமாகவே மாறி திரையில் தோன்றுவதை விட வேறு ஏதும் சந்தோஷம் இல்லை" என ராஜ்குமார் ராவ் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com