தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தவரும் மலையாளத்தின் முன்னணி நடிகருமான டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் டொவினோ தாமஸுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை, தனது ட்விட்டர் பக்கத்தில் “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உடனேயே தனிமைப்படுத்திக்கொண்டேன். ஆனால், எனக்கு கொரோனாவுக்கான எந்த அறிகுறிகளும் இல்லாமலேயே தொற்று உறுதியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மலையாளத்தில் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த ’என்னு நின்டே மொய்தீன்’ ‘லூசிஃபர்’ படங்களின் மூலம் தமிழ் ரசிர்களிடமும் கவனம் ஈர்த்தார். தமிழில் ‘அபியும் அனுவும்’ படத்தைத் தொடர்ந்து, தனுஷ் - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் வெளியான ‘மாரி 2’ படத்தில் வில்லனாக டொவினோ தாமஸ் மிரட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.