\
ஓடிடியில் காண சிறந்த 5 சர்வதேசப் படங்கள்: தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ‘மின்னல் முரளி’

ஓடிடியில் காண சிறந்த 5 சர்வதேசப் படங்கள்: தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ‘மின்னல் முரளி’

ஓடிடியில் காண சிறந்த 5 சர்வதேசப் படங்கள்: தி நியூயார்க் டைம்ஸ் பட்டியலில் ‘மின்னல் முரளி’
Published on

’தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள 'ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேச படங்களின் பட்டியலில்' நடிகர் டொவினோ தாமஸின் ‘மின்னல் முரளி’ இடம் பிடித்துள்ளது.

நடிகர்கள் டொவினோ தாமஸ் - குரு சோமசுந்தரம் நடிப்பில் கடந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ’மின்னல் முரளி’ இந்தியாவைக் கடந்தும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. நெட்ஃப்ளிக்ஸின் டாப் 10 படங்களிலும் தொடர்ந்து இடம் பிடித்து கவனம் ஈர்த்தது.

இந்த நிலையில், அமெரிக்காவின் புகழ்மிக்க ’தி நியூயார்க் டைம்ஸ்’ ஓடிடியில் பார்க்க சிறந்த 5 சர்வதேசப் படங்களைப் பட்டியலிட்டுள்ளது. அதில், ‘மின்னல் முரளி’ மூன்றாமிடம் பிடித்துள்ளது. ’binti', 'work force','Gritt','mute fire' ஆகியவை மற்ற நான்கு படங்களாக உள்ளன. இதனை, நடிகர் டொவினோ தாமஸ் உற்சாகமுடன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com