\
டொவினோ தாமஸ் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வாஷி’ படப்பிடிப்பு நிறைவு

டொவினோ தாமஸ் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வாஷி’ படப்பிடிப்பு நிறைவு

டொவினோ தாமஸ் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘வாஷி’ படப்பிடிப்பு நிறைவு
Published on: 

நடிகை கீர்த்தி சுரேஷ் தயாரித்து நடிக்கும் ‘வாஷி’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கீர்த்தி சுரேஷ் ‘சாணிக்காயிதம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, ‘குட்லக் சகி’ மலையாளத்தில் ‘வாஷி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ’வாஷி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்திருக்கிறது. இப்படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழனான விஷ்ணு ராகவ் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் மேனன் தயாரித்துள்ளர்.

நாயகனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். சமீபத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘காணே காணே’, ‘மின்னல் முரளி’ இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதற்கேற்றவாறு, படப்பிடிப்பை முடித்துள்ளது படக்குழு. ‘வாஷி’ படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் கீர்த்தி சுரேஷ், விஷ்ணு ராகவ்வுடன் இருக்கும் புகைப்படங்களை உற்சாகமுடன் டொவினோ தாமஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com