வழக்கறிஞராக கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: ‘வாஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வழக்கறிஞராக கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: ‘வாஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

வழக்கறிஞராக கவனம் ஈர்க்கும் கீர்த்தி சுரேஷ்: ‘வாஷி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
Published on

டொவினோ தாமஸ் - கீர்த்தி சுரேஷின் ‘வாஷி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

கீர்த்தி சுரேஷ் ‘சாணிக்காயிதம்’, தெலுங்கில் ‘சர்காரு வாரிபாட்டா’, மலையாளத்தில் ‘வாஷி’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார். இதில், ’வாஷி’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. விரைவில் வெளியாகவிருக்கும் இப்படத்தினை கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால தோழனான விஷ்ணு ராகவ் இயக்கியுள்ளார். கீர்த்தி சுரேஷின் தந்தை சுரேஷ் மேனன் தயாரித்துள்ளர்.நாயகனாக டொவினோ தாமஸ் நடித்துள்ளார்.

சமீபத்தில், டொவினோ தாமஸ் நடிப்பில் ஓடிடியில் வெளியான ‘காணே காணே’, ‘மின்னல் முரளி’ இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால், ’வாஷி’க்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் மகேஷ் பாபு, சமந்தா, த்ரிஷா உள்ளிட்டோர் வெளியிட்டுள்ளனர். வழக்கறிஞர் கெட்டப்பில் கீர்த்தி சுரேஷும் டொவினோ தாமஸும் கவனம் ஈர்க்கிறார்கள்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com