\
Will AI Take Over Cinema? Tom Cruise’s One Powerful Statement!
Tom CruiseReuters

சினிமாவைக் கைப்பற்றுமா AI? Tom Cruise சொன்ன அந்த ஒரு வார்த்தை!

AI சினிமாவை மாற்றினாலும், படைப்பாளிகள் தொடர்ந்து படைக்க வேண்டும் என நடிகர் டாம் குரூஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
Published on

செய்தியாளர் - M.மீரா

திரைத்துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், மனித படைப்பாற்றலுக்கு ஈடாக எதுவும் இல்லை என ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் தெரிவித்துள்ளார். லண்டனில் நடைபெற்ற BAFTA Life in Pictures நிகழ்ச்சியில் பங்கேற்ற டாம் குரூஸ் தனது நீண்ட திரைப்படப் பயணம் குறித்துப் பேசினார். அப்போது, எதிர்காலத்தில் திரைப்படத் தயாரிப்பில் AI-இன் பங்கு எப்படி இருக்கும் என்பது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Tom Cruise
Tom Cruise Reuters

AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு இனி திரைப்படத் துறையில் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதை ஏற்றுக்கொண்ட டாம் குரூஸ், அதே நேரத்தில் மனிதர்களின் படைப்பாற்றலுக்கும், உண்மையான அனுபவங்களுக்கும் எப்போதும் முக்கியத்துவம் இருக்கும் எனக் குறிப்பிட்டார்.

BAFTA நிகழ்ச்சியின் தொகுப்பாளர் எடித் போமனுடன் நடைபெற்ற உரையாடலில், ’மனிதர்களைப் போல எதுவும் இல்லை. படைப்பாளிகள் தொடர்ந்து படைத்துக்கொண்டே இருக்க வேண்டும். AI வரப்போகிறது; அது நடக்கத்தான் போகிறது. ஆனால் மக்கள் உண்மையான விஷயங்களைப் பார்க்க விரும்புகிறார்கள்’ என டாம் குரூஸ் தெரிவித்ததாக Variety குறிப்பிட்டுள்ளது.

மேலும், திரையரங்க அனுபவத்தை தொடர்ந்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஸ்ட்ரீமிங் தளங்களுக்கு தான் எதிரானவர் அல்ல என்றும், திரையரங்கில் ஒன்றாக அமர்ந்து திரைப்படத்தைப் பார்ப்பது தனித்துவமான அனுபவம் என்றும் அவர் கூறியுள்ளார்.

digger
diggerreuters

இதனிடையே, ‘Mission: Impossible’ தொடரில் இருந்து விலகியுள்ள டாம் குரூஸ், அடுத்ததாக Digger’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். Alejandro G. Iñárritu இயக்கும் இப்படத்தில் Riz Ahmed, John Goodman உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படம் அக்டோபர் 2ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Will AI Take Over Cinema? Tom Cruise’s One Powerful Statement!
‘ஒரு இயக்குநராக அப்பாவிடம் பிடித்தது இதான்..’ ஓபனாக பேசிய ஜேசன் சஞ்சய்
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com