தர்ஷன் - லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

தர்ஷன் - லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
தர்ஷன் - லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

’பிக்பாஸ்’ தர்ஷன் - லாஸ்லியாவின் ‘கூகுள் குட்டப்பா’ ரிலீஸ் தேதியை அறிவித்திருக்கிறது படக்குழு.

மலையாளத்தில் சுரஜ் வெஞ்சிராமூடு நடிப்பில், இயக்குநர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ தமிழில் கே.எஸ் ரவிக்குமார் தயாரிப்பில் ரீமேக்காகியுள்ளது. அவரின், உதவி இயக்குநர்கள் சபரி மற்றும் சரவணன் இயக்கி முடித்துள்ளனர்.

தந்தை கதாப்பாத்திரத்தில் வரும் ரவிக்குமாரின் மகனாக ’பிக்பாஸ்’ புகழ் தர்ஷன், மகள் கதாப்பாத்திரத்தில் லாஸ்லியா நடித்துள்ளார்கள்.'கூகுள் குட்டப்பா ' என பெயர் வைக்கப்பட்டுள்ள இப்படத்தின், படப்பிடிப்பு முழுக்க முழுக்க தென்காசி, குற்றாலம் உள்ளிட்டப் பகுதிகளில் நடைபெற்று கடந்த ஆண்டு இறுதியில் நிறைவடைந்தது.

சமீபத்தில் ட்ரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. தர்ஷன், லாஸ்லியா, யோகிபாபு, கே.எஸ் ரவிக்குமாருடன் ரோபோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இந்த நிலையில், வரும் மே 6 ஆம் தேதி தியேட்டர்களில் ‘கூகுள் குட்டப்பா’ வெளியாகிறது என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதே தேதியில், ஆர்.கே சுரேஷின் ‘விசித்திரன்’ ( மலையாள ‘ஜோசப்’ ரீமேக்) வெளியாகிறது. இரண்டு படங்களுமே மலையாளத்தில் ஹிட் அடித்த படங்களில் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com