ஒரு சதுர அடி ரூ.80,778: ’அடேயப்பா’ விலையில் தமன்னா வாங்கிய வீடு!
நடிகை தமன்னா, மும்பையில் பிரமாண்ட வீடு ஒன்றை வாங்கியுள்ளார் என்றும் அதன் விலை ஒரு சதுர அடிக்கு ரூ.80,778 என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தியில் நடித்து வருகிறார் நடிகை தமன்னா. மும்பையை சேர்ந்த தமன்னா, அங்கு அந்தேரியில் உள்ள லோகண்ட்வாலா அடுக்குமாடி குடியிருப்பில் தற்போது வசித்து வருகிறார். இவர் வடமேற்கு மும்பையில் உள்ள வெர்சோ வாவில் புதிய வீடு ஒன்றை வாங்க, பிரபல பில்டர் சமீர் போஜ்வானியிடம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.
’பே வியூ’ என்ற பெயர் கொண்ட, 22 மாடிகளை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில் 14 வது தளத்தை வாங்கி இருக்கிறார் தமன்னா. இந்த வீட்டின் ஒரு சதுர அடி ரூ.80,778. இது, வழக்கமாக அந்தப் பகுதியில் இருக்கும் விலையை விட இரண்டு மடங்கு அதிகம் என்று கூறப்படுகிறது. அவர் 2055 சதுர அடிக்கு 16.6 கோடி ரூபாய் கொடுத்திருக்கிறார் என்றும் பத்திரப் பதிவுக்கு மட்டும் 99.60 லட்சம் செலவழித்திருக்கிறார் என்றும் கூறப்படுகின்றன.
இந்த வீட்டில் இருந்து எந்தப் பகுதியில் பார்த்தாலும் கடல் தெரியுமாறு வீடு கட்டப்பட்டுள்ளது. அவருக்கு இரண்டு கார் பார்க்கி ங்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுபற்றி தமன்னாவிடம் கேட்டதற்கு அவர் பதிலேதும் தெரிவிக்கவில்லை.