\
எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தினை வெளியிடும் சிம்பு சினி ஆர்ட்ஸ்

எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தினை வெளியிடும் சிம்பு சினி ஆர்ட்ஸ்

எஸ்.ஜே சூர்யா ஹீரோவாக நடிக்கும் படத்தினை வெளியிடும் சிம்பு சினி ஆர்ட்ஸ்
Published on

எஸ்.ஜே சூர்யாவின் ‘கடமையை செய்’ படத்தினை சிம்பு சினி ஆர்ட்ஸ் கைப்பற்றியுள்ளது.

’மாநாடு’ வெற்றிக்குப்பிறகு ’பொம்மை’, ’டான்’, ‘லத்தி’ உள்ளிட்டப் படங்களில் நடித்துவரும் எஸ்.ஜே சூர்யா ’கடைமையை செய்’ படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார். நாயகியாக ’பிக்பாஸ்’ யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். அருண் ராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த ஆண்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்.

இந்த நிலையில், காவல்நிலைய கதைக்களத்தைக் கொண்ட இப்படம் வரும் மே மாதம் வெளியாகிறது என்று படக்குழு தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், இப்படத்தினை நடிகர் சிலம்பரசனின் சிம்பு சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிடுவதாகவும் அறிவித்துள்ளார்கள். இதனால், கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. எஸ்.ஜே சூர்யார் நடித்துள்ள ‘டான்’ வரும் மே மாதம் 13 ஆம் தேதி வெளியாவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com