\
க/பெ.ரணசிங்கம் படத்தை பாராட்டிய சூர்யா... நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

க/பெ.ரணசிங்கம் படத்தை பாராட்டிய சூர்யா... நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

க/பெ.ரணசிங்கம் படத்தை பாராட்டிய சூர்யா... நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!
Published on

விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ஓடிடி தளத்தில் க/பெ. ரணசிங்கம் என்ற திரைப்படம் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.

கட்டணத்தைக் கட்டி சில மணிநேரங்களுக்குள் பார்த்துவிட வேண்டும் என்பதுபோன்ற பல விதிமுறைகளுக்கு உட்பட்டு பலரும் இந்த திரைப்படத்தைப் பார்த்து, தங்கள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில், இந்த திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சூர்யா, ‘’அடித்தட்டு மக்களின் இயலாமையை, வறுமையை, வெளிநாடு போய் படும் நெருக்கடியை, நெஞ்சைத் தட்டி நியாயம் கேட்கிற படம் க/பெ.ரணசிங்கம். இயக்குனர் பி.விருமாண்டி, நடிகர்கள் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட படக்குழுவினரைப் பாராட்டி ட்வீட் செய்துள்ளார்.

அதற்கு ’’சிறந்த வார்த்தை... நன்றி’’ என பதில் ட்வீட் செய்துள்ளார் விஜய் சேதுபதி.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com