சாலை விபத்தில் உயிரிழந்த ரசிகர்.. வீட்டுக்கே சென்று கண்ணீருடன் அஞ்சலி செலுத்திய சூர்யா!

சாலை விபத்தில் உயிரிழந்த தன்னுடைய ரசிகரின் வீட்டுக்கே சென்று நடிகர் சூர்யா அஞ்சலி செலுத்தியுள்ளார்.
surya
surya file image

நடிகர் சூர்யாவின் நற்பணி மன்றத்தில் உறுப்பினராக இருந்தவர்தான் அரவிந்த். 24 வயதான இவர், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி சாலை விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த செய்தியை கேட்டு நடிகர் சூர்யா ரொம்பவே மனமுடைந்து போனதாக தெரிகிறது.

அந்த நேரத்தில், நடிகர் சூர்யா கங்குவா பட ஷூட்டிங்கில் இருந்ததால், அரவிந்தின் இறுதி சடங்கில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை என்று சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், சென்னை எண்ணூரில் இருக்கும் அரவிந்த் வீட்டிற்கு நேரடியாக சென்ற சூர்யா, அவரோட போட்டோவிற்கு அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து, அரவிந்த் குடும்பத்தாருக்கும் ஆறுதல் கூறினார்.

இது தொடர்பான போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. இதுபோன்று, தன்னுடைய பிறந்தநாள் அன்று, பேனர் வைக்கச்சென்ற ரசிகர்கள் இரண்டு பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தபோதும், மனமுடைந்த சூர்யா, அவர்களோட குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் ஆறுதல் சொன்னது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com