‘பாண்டவர் அணி’ யை வழிமொழிந்த சூர்யா : சூடுபிடிக்கும் நடிகர் சங்க தேர்தல்
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணியில் போட்டியிடுபவர்களை சூர்யா, விவேக் உள்ளிட்ட பிரபல நடிகர் நடிகைகள் முன் மொழிந்து வழி மொழிந்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் உள்ள பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்து 6 மாதங்கள் நிறைவு பெற்றுள்ளது. இந்நிலையில்
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் நாசர் தலைமையில் விஷால், கார்த்தி, கருணாஸ், பூச்சி முருகன், நந்தா, அஜய் ரத்தினம், கோவை சரளா, மனோபாலா, லதா, குஷ்பூ, சோனியா, ரமணா, பிரேம் குமார், சிபிராஜ் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
இவர்களில் செயற்குழுவிற்குப் போட்டியிடும் சிபிராஜை, நடிகர் சூர்யா வழிமொழிந்துள்ளார். அதேபோல் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பூச்சிமுருகனை நடிகர் விவேக் முன் மொழிந்தார். கடந்த முறை துணைத்தலைவராக இருந்த பொன்வண்ணன் அவரை வழிமொழிந்தார். அதேபோல நடிகர் விஷாலை சுந்தர்.சி, குஷ்பூவை நடிகர் ரஹ்மானும் முன்மொழிந்துள்ளனர். இந்த அணிக்கு எதிராக இயக்குநர் பாக்யராஜ் தலைமையிலான அணி களமிறங்கவுள்ளார்கள்.