\
“கத்துக்கறேன் தலைவரே” - ‘என்ஜிகே’ சூர்யா கருத்து

“கத்துக்கறேன் தலைவரே” - ‘என்ஜிகே’ சூர்யா கருத்து

“கத்துக்கறேன் தலைவரே” - ‘என்ஜிகே’ சூர்யா கருத்து
Published on

‘என்ஜிகே’ குறித்த அத்தனை கருத்துக்களையும் தலைவணங்கி ஏற்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘என்ஜிகே’. இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறுயது.


 
கிட்டத்தட்ட 6 வருடங்களுக்குப் பிறகு செல்வராகவனின் திரைப்படம் திரைக்கு வருகிறது என்பதால் ரசிகர்கள் அதிக எதிர்ப்பார்ப்பில் இருந்தனர். 

ஆனால் படத்தில் லாஜிக் இல்லை, காட்சிகள் தொடர்பில்லாமல் வருகின்றன எனப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. படம் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யவில்லை என்று பலரும் சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டனர். இதனையடுத்து என்ஜிகே திரைப்படம் வசூலில் பின் தங்கியதாகவே கூறப்படுகிறது.

இந்நிலையில் ‘என்ஜிகே’ திரைப்படம் குறித்து நடிகர் சூர்யா, தனது ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்,“என்ஜிகே திரைப்படம் குறித்த அத்தனை கருத்துக்களையும் தலைவணங்கி ஏற்கிறேன். மாறுபட்ட கதையம்சத்தையும் நடிகர்களின் வித்தியாசமான நடிப்பையும் நுட்பமாகக் கவனித்துப் பாராட்டிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. இத்திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி. கத்துக்கறேன் தலைவரே'' என்று தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com