வெற்றிமாறன் - சூர்யா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு!

வெற்றிமாறன் - சூர்யா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு!

வெற்றிமாறன் - சூர்யா இணையும் படத்தின் பெயர் அறிவிப்பு!
Published on

சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்ற தகவலை தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு உறுதி செய்த நிலையில் படத்தின் பெயரை வெற்றிமாறன் அறிவித்துள்ளார்.

‘என்.ஜி.கே’, ‘காப்பான்’ படங்களை தொடர்ந்து சூர்யா நடித்துள்ள திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறன்
இயக்கத்தில் சூர்யா நடிக்கயிருக்கிறார் என தகவல்கள் வெளியாகியது. அதேசமயம் ‘அசுரன்’ படத்தை தொடர்ந்து விஜய், சூர்யாவுடன் வெற்றிமாறன் இணைகிறார் எனவும் கூறப்பட்டது. இதற்கிடையே நகைச்சுவை நடிகர் சூரியை வைத்து வெற்றிமாறன் ஒரு படத்தை இயக்குகிறார் எனவும் அறிவிப்பு வெளியாகியது.

இதனால் சூர்யா மற்றும் விஜயுடன் அவர் இணையும் தகவல் உறுதிப்படுத்தப்படாமல் இருந்த நிலையில் சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறார் என்பதை தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ தாணு உறுதி செய்தார். அது தொடர்பான அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்நிலையில் விருது வழங்கும் விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன் தன்னுடைய இயக்கத்தில் சூர்யா நடிக்கும் திரைப்படத்தின் பெயரை வெளியிட்டார்.

படத்திற்கு 'வாடிவாசல்' என பெயரிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஜல்லிக்கட்டுடன் தொடர்புடைய 'வாடிவாசல்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதால் இந்தப்படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com