தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்

தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்

தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் பேனர் வைக்காதீர்கள் - நடிகர் சூர்யா வேண்டுகோள்
Published on

திரைப்படம் வெளியீட்டின்போது பேனர்கள் வைக்கவேண்டாம் என்று தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு நடிகர் சூர்யா அறிவுறுத்தியுள்ளார்.

சென்னையில் நடைபெற்ற காப்பான் படவிழாவின் போது சூர்யா இவ்வாறு பேசியுள்ளார். மேலும், பேனர் வைப்பதற்கு ஆகும் செலவை கல்வி உதவிக்காக பள்ளிகளுக்கு வழங்குங்கள் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். அனைத்து ஊர்களிலும் ரசிகர்கள் பேனர்கள் வைக்கக்கூடாது என்று தயவுசெய்து கேட்டுக் கொள்கிறேன் என்றும் அவர் கூறினார்.

முன்னதாக, பேனர்கள் வைக்ககூடாது என தனது ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் அறிவுறுத்தியிருந்தார். பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, ‘பிகில்’ பட இசை வெளியீட்டு நிகழ்வின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்ககூடாது கேட்டுக்கொண்டார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com