கவனம் ஈர்க்கும் எஸ்.ஜே சூர்யா - யாஷிகா ஆனந்த்தின் ‘கடமையை செய்’ ஃபர்ஸ்ட் லுக்

கவனம் ஈர்க்கும் எஸ்.ஜே சூர்யா - யாஷிகா ஆனந்த்தின் ‘கடமையை செய்’ ஃபர்ஸ்ட் லுக்

கவனம் ஈர்க்கும் எஸ்.ஜே சூர்யா - யாஷிகா ஆனந்த்தின் ‘கடமையை செய்’ ஃபர்ஸ்ட் லுக்
Published on

எஸ்.ஜே சூர்யா, யாஷிகா ஆனந்த் நடித்துள்ள ‘கடமையை செய்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது.

’மாநாடு’, ’பொம்மை’, ’டான்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வரும் எஸ்.ஜே சூர்யா ’கடைமையை செய்’ படத்தில் நாயகனாக நடித்து முடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ’பிக்பாஸ்’ புகழ் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். கடந்த 2016 ஆம ஆண்டு சுந்தர் சி நடிப்பில் வெளியான ‘முத்தின கத்தரிகாய்’ படத்தை இயக்கிய வெங்கட் ராகவன்தான் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார். போஸ்டரில் எஸ்.ஜே சூர்யாவின் முகத்தை பாதி சிங்கத்தின் முகமாகவும், இரண்டு கண்களில் ஒரு கண் சிங்கப் பார்வையாகவும் மிரட்டும் கெட்டப்பில் வெளியிட்டுள்ளனர். அதோடு, காவல்நிலைய செங்கற்களும் போஸ்டரில் இடம்பெற்றிருப்பதால், காவல்துறை கதைக்களத்தைக் கொண்டது என்பதை உணர்த்துகிறது ‘கடமையை செய்’.

இதற்கு முன்னதாக, ’வாலி’, ’குஷி’ மூலம் அஜித், விஜய்க்கு சூப்பர் ஹிட் படங்கள் கொடுத்த எஸ்.ஜே சூர்யா ‘நியூ’ படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத்தொடர்ந்து, ’அன்பே, ஆருயிரே’, ’கள்வனின் காதலி’, ’நியூட்டனின் மூன்றாம் விதி’, ’மெர்சல்’, ’ஸ்பைடர்’ என ஹீரோ, வில்லன் கேரக்டர்களில் மிரட்டி வந்தவர், தற்போது ஹீரோ கேரக்டரிலும் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’மான்ஸ்டர்’ விமர்சன ரீதியாக பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com