மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்: ஜோதிகா பேச்சு குறித்து சூர்யா விளக்கம்

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்: ஜோதிகா பேச்சு குறித்து சூர்யா விளக்கம்
மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம்: ஜோதிகா பேச்சு குறித்து சூர்யா விளக்கம்

மதங்களைக் கடந்து மனிதமே முக்கியம் என்பதை தங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தர விரும்புவதாக சூர்யா தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்றில் நடந்த விருது வழங்கும் விழாவில் நடிகை ஜோதிகாவிற்கு அவர் நடித்த ராட்சசி படத்திற்காக 2019-க்கு சிறந்த பெண் நடிகர் விருது வழங்கப்பட்டது. அவ்விழாவில் தனக்கு வழங்கப்பட்ட விருதை பெற்றுக் கொண்டு பேசிய ஜோதிகா தஞ்சையில் ஒரு படப்பிடிப்புக்கு சென்ற போது தான் பார்த்த சில விஷயங்களை பதிவு செய்துள்ளார்.

‘பிரகதீஸ்வரர் கோவில் மிக அழகாக உள்ளது. உதய்பூர் பேலஸ் போல உள்ளது. படப்பிடிப்புக்காக தஞ்சை அரசு மருத்துவ மனைக்குச் சென்ற போது அது அடிப்படை வசதியற்று, பராமரிப்பற்று இருந்தது என்றும், நாம் கோவில்களை பராமரிக்க அதிகம் செலவு செய்கிறோம் பெயின்ட் பண்ணுகிறோம், கோவில் உண்டியல்களில் பணம் போடுகிறோம். அதே போல அரசு மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள். அரசு பள்ளிகளை மேம்படுத்துவதற்கும் கொடுங்கள்’ என்று ஜோதிகா வேண்டுகோள் வைத்தார்.

ஜோதிகாவின் இந்த கருத்துக்கு பலதரப்பில் இருந்து எதிர்ப்புகளும், ஆதரவுகளும் எழுந்தன. இந்நிலையில், ஜோதிகாவுக்கு ஆதரவாக அவரது கணவரும், நடிகருமான சூர்யா விரிவான அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “கோயில்களை போல பள்ளி, மருத்துவமனைகளை உயர்வாக கருத வேண்டும் என்றுதான் ஜோதிகா கூறியிருந்தார். பள்ளிகள், மருத்துவமனைகளை இறைவன் உறையும் இடமாக கருத வேண்டும். மக்களுக்கு உதவினால் அது கடவுளுக்கு செலுத்தும் காணிக்கை என்பது திருமூலர் காலத்து சிந்தனை. ஜோதிகாவின் கருத்தில் உறுதியாக இருக்கிறோம்.

தரக்குறைவாக சிலர் அவதூறு பரப்பும் போதெல்லாம் முகமே தெரியாத பலர் தங்களுக்கு சார்பாக பதிலளிக்கிறார்கள். நல்லோர்கள், நண்பர்கள், ரசிகர்கள் துணை நிற்கிறார்கள்” என்று சூர்யா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com