“உங்கள் எனர்ஜியை வீணாக்காதீங்க..” ரசிகர்களுக்கு சூர்யா கொடுத்த அட்வைஸ்!
தமிழ் சினிமாவின் முதன்மை நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடித்து சமீபத்தில் வெளியான விஸ்வநாத் & சன்ஸ் மிகப்பெரிய வெற்றியடைந்த நிலையில், இன்று சென்னை மாங்காட்டில் திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களைச் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் பேசிய அவர், “அன்பை மட்டுமே விதைப்போம். சமூக வலைதளத்தில் ஒரு முட்டாள் ஒரு பதிவைப் போடுகிறான் என்பதற்காக, நாம் அதற்குப் பதிலளிக்க ஆரம்பிக்கும்போதுதான் நம்மை நாமே காயப்படுத்திக் கொள்கிறோம். நாம் நாமாகவே இருப்போம். அவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். நாம் எதுவும் பேசத் தேவையில்லை. அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும், அவர்களை மாற்ற வேண்டும் என்று முயற்சி செய்வது கொஞ்சம் கஷ்டமான விஷயம். சிலருக்குப் புரியும்; முக்கால்வாசி பேருக்கு அது புரியாது. அதனால், உங்கள் எனர்ஜியை வீணாக்கிக் கொள்ள வேண்டாம். உங்களுக்குப் பிடித்ததை உண்மையாகவும், நேர்மையாகவும் தினமும் செய்துகொண்டே இருங்கள். நிச்சயமாக வெற்றி கிடைக்கும்” என்றார்.

