\
"சூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார்" - இயக்குநர் பாரதிராஜா !

"சூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார்" - இயக்குநர் பாரதிராஜா !

"சூர்யா தவறாக நடக்கவோ பேசவோ மாட்டார்" - இயக்குநர் பாரதிராஜா !
Published on

நடிகர் சூர்யா எந்த ஒரு விவகாரத்திலும் தவறான கருத்துக்களை பேச மாட்டார் என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார்.

பாரதிராஜா தலைமையிலான தமிழ்த் திரைப்பட நடப்புத் தயாரிப்பாளர் சங்கத்தின் அலுவலகம், சென்னை - அண்ணா சாலையில் திறக்கப்பட்டது. சங்கத்தின் செயற்குழுக் கூட்டமும் நடைபெற்றது. எஸ்.ஏ.சந்திரசேகரன், தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி, லலித் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் இதில் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜா, திரைப்படத் தயாரிப்புத்துறை சுமுகமான முறையில் செல்ல வேண்டும் என்பதே நோக்கம் என்றார். மேலும், நீட் தேர்வு குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பற்றி கேள்வி எழுப்பியபோது, சூர்யா தவறாக நடக்கவும் மாட்டார், பேசவும் மாட்டார் என்று பாரதிராஜா கூறினார்.

முன்னதாக தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர். இது தொடர்பாக நேற்று அறிக்கை வெளியிட்ட சூர்யா, நீட் தேர்வுக்கு எதிராக தன்னுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்திருந்தார். நீட் தேர்வு தொடர்பான நடிகர் சூர்யாவின் அறிக்கை நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com