\
’சிறுத்தை’ சிவா படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா

’சிறுத்தை’ சிவா படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா

’சிறுத்தை’ சிவா படத்தில் இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கும் சூர்யா
Published on

சிறுத்தை சிவா படத்தில் இணையும் சூர்யா இரட்டை கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து முடித்துள்ளார். குற்றாலம் மற்றும் தென்காசி பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அடுத்ததாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கிறார். இதனை சிறுத்தை சிவாவும் பேட்டிகளில் உறுதி செய்துள்ளார். இந்த நிலையில், ’சிறுத்தை’ சிவா இயக்கும் படத்தில் சூர்யா இரட்டைக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

சிறுத்தை சிவா சமீபத்திய பேட்டியில் சூர்யாவுக்காக செம சுவாரஸ்யமான கதையை தயார் செய்துள்ளேன் என்று குறிப்பிட்டிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துவங்கவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை முடித்தப்பிறகே ‘வாடிவாசல்’ படத்தில் சூர்யா நடிக்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com