\
அக்டோபரில் தொடங்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு?

அக்டோபரில் தொடங்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு?

அக்டோபரில் தொடங்கும் ‘வாடிவாசல்’ படப்பிடிப்பு?
Published on

சூர்யா - வெற்றிமாறனின் ’வாடிவாசல்’ படம் வரும் அக்டோபரில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். வெற்றிமாறனும் நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ’விடுதலை’ படத்தை இயக்கி முடித்துவிட்டு தற்போது, ‘வாடிவாசல்’ படத்திற்கான முன்தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதம் முதல் ‘வாடிவாசல்’ படத்தின் படப்பிடிப்புகள் மதுரையில் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், ‘வாடிவாசல்’ படத்திற்குப் பட்ஜெட் 200 கோடி ரூபாய் என்றும் சொல்லப்படுகிறது. ஜல்லிக்கட்டு கதைக்களத்தைக் கொண்ட இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க தாணு தயாரிக்கிறார். சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் லுக் வெளியாகி கவனம் ஈர்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com