”இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு”: சூர்யா

”இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு”: சூர்யா

”இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு”: சூர்யா
Published on

‘ஜெய் பீம்’ படத்தைப் பாராட்டிய நடிகர் சூரிக்கு, “இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு” நடிகர் சூர்யா ட்வீட் செய்துள்ளார்.

சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான ’ஜெய் பீம்’படத்தை சினிமாதுறையினர், ரசிகர்கள், அரசியல்வாதிகள் என சூர்யாவுக்கு பல தரப்பினரும் பாரட்டி அறிக்கை வெளியிட்டும் வீடியோ வெளியிட்டும் ஆதரவாக இருக்கிறார்கள். நடிகர் சூரி ஜெய்பீம் படம் பார்த்துவிட்டு அவரது ட்விட்டர் பக்கத்தில், ”‘ஜெய் பீம்’ படத்தை இரவு தூங்குறதுக்கு முன் கொஞ்ச நேரம் பார்த்துட்டு, மிச்சத்தை மறுநாள் பார்த்துக்கலாம்ன்னு நெனச்சு தான் படம் பார்க்க ஆரம்பிச்சேன்.

படம் முடிஞ்சும் எழுந்திருக்க முடியலை, அப்படியே உறைந்து உட்கார்ந்து இருந்தேன். ஜெய்பீம் படமல்ல, பாடம். விருது கிடைத்தால் அது விருதுக்கு பெருமை” என்று பாராட்டியிருந்தார். இந்த நிலையில், தற்போது சூர்யா அவரது ட்விட்டர் பக்கத்தில், “இன்னொரு ஹீரோ கிட்டேருந்து வாழ்த்து வாங்குறது சந்தோஷமா இருக்கு” என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com