வெளியானது சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர் 

வெளியானது சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர் 
வெளியானது சூர்யாவின் காப்பான் ட்ரெய்லர் 

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணியில் ஐயன், மாற்றான் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக உருவாகியுள்ள படம்தான் காப்பான். இந்தப் படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தன. இந்தப் படத்தில் மோகன்லால், ஆர்யா, ஆயிஷா, சமுந்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், காப்பான் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே, டீசரில் இந்தியா பாகிஸ்தான் பிரச்னை, இயற்கை விவசாயம், மக்கள் போராட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த வசனங்கள் இடம்பெற்றிருந்தன. ஆனால், ட்ரெய்லரில் குறிப்பிடும்படியான வசனம் எதுவும் இடம்பெறவில்லை.

ராணுவ வீரர்களின் பெருமை குறித்து மோகன்லால் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது. அதேபோல், ஒரு உயிரை பலிகொடுத்து நூறுபேரை காப்பாற்ற முடியும் என்றால் அதில் தப்பில்லை என மோகன்லால் பேசும் மற்றொரு வசனம் இடம்பெற்றுள்ளது. வழக்கமாக கேவி ஆனந்த் படங்களில் வருவது போல் வெளிநாடுகளில் பாடல்கள் படப்பிடிப்பு, குண்டுவெடிப்பு, அரசியல்வாதிகளின் வசனம் உள்ளிட்டவை இந்த ட்ரெய்லரிலும் இடம்பெற்றுள்ளன.

ட்ரெய்லரை காண இங்கே கிளீக் செய்யவும்.. “காப்பான் ட்ரெய்லர்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com