\
சூர்யாவின் ’ஸ்ரீ’ பட  இசையமைப்பாளர் டி.எஸ் முரளிதரன் மரணம்

சூர்யாவின் ’ஸ்ரீ’ பட இசையமைப்பாளர் டி.எஸ் முரளிதரன் மரணம்

சூர்யாவின் ’ஸ்ரீ’ பட இசையமைப்பாளர் டி.எஸ் முரளிதரன் மரணம்
Published on

சூர்யாவின் ‘ஸ்ரீ’ படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் டி.எஸ் முரளிதரன் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் புஷ்பவாசகன் இயக்கத்தில் வெளியான ‘ஸ்ரீ’ படத்திற்கு இசையமைப்பாளராக பணியாற்றினார் டி.எஸ் முரளிதரன். ’வசந்த சேனா வசந்த சேனா’ ’பெண்ணே மொழி வேண்டாம்’, ’மதுர ஜில்லா மச்சக்கன்னி’ போன்ற பாடல்கள் சூப்பர் ஹிட் அடித்தவை. குறிப்பாக, ஹரீஷ் ராகவேந்திரா, சித்ரா குரலில் ’வசந்த சேனா’ இப்போதும் பலரின் ஃபேவரைட் பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுவரை பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள டி.எஸ் முரளிதரன் நேற்றிரவு உயிரிழந்தார். சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று இறுதிச்சடங்குகள் நடைபெறுகின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com