நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘ஜெய் பீம்’ தேர்வு

நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘ஜெய் பீம்’ தேர்வு
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கு ‘ஜெய் பீம்’ தேர்வு
நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வாகியுள்ளது ‘ஜெய் பீம்’ திரைப்படம்.
சூர்யா நடிப்பில் சமீபத்தில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான ‘ஜெய் பீம்’ பெரும் வரவேற்பைப் பெற்று பாராட்டுகளைக் குவித்து வருகிறது. தா.செ ஞானவேல் இயக்கிய இப்படம் ஏற்கனவே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுக்கொண்டு வரும் நிலையில், தற்போது 9-வது நொய்டா சர்வதேச திரைப்பட விழாவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதனை அதிகாரபூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்கள். 50 க்கும் மேற்பட்ட உலக நாடுகளின் திரைப்படங்கள் போட்டியிடும் இவ்விழா வரும் ஜனவரி 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கனவே, ’ஜெய் பீம்’ ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக புள்ளிகளைப் பெற்று முதலிடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்தியப் படமாகாவும் அறிவிக்கப்பட்டது. ஆஸ்கர் யூடியூப் தளத்தில் இடம்பிடித்த முதல் தமிழ் படமாகவும் தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com