\
இருளர் சமூக மாணவர்கள் நலனுக்காக முதல்வரிடம் ரூ.1 கோடி நிதியுதவி அளித்த சூர்யா

இருளர் சமூக மாணவர்கள் நலனுக்காக முதல்வரிடம் ரூ.1 கோடி நிதியுதவி அளித்த சூர்யா

இருளர் சமூக மாணவர்கள் நலனுக்காக முதல்வரிடம் ரூ.1 கோடி நிதியுதவி அளித்த சூர்யா
Published on: 

பழங்குடி இருளர் இன மாணவர்களின் கல்வி நலனுக்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினிடம் நடிகர் சூர்யா தங்கள் 2-டி நிறுவனம் சார்பாக 1 கோடி நிதியுதவி வழங்கினார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ ஞானவேல் இயக்கத்தில் நாளை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ படம் வெளியாகவிருக்கிறது. காலங்காலமாக சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டுவரும் பழங்குடியின இருளர் மக்களின் வலி இப்படத்தில் பேசப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நடிகர் சூர்யா தங்கள் 2-டி எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் சார்பாக 1 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளார். அவருடன் ஜோதிகா, துர்கா ஸ்டாலின், நீதிபதி சந்துரு, இருளர் சமூக மக்களும் உடன் இருந்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com