\
”நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது”- கவனம் ஈர்க்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்

”நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது”- கவனம் ஈர்க்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்

”நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது”- கவனம் ஈர்க்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ டீசர்
Published on

சூர்யாவின் ’எதற்கும் துணிந்தவன்’ டீசர் வெளியாகியுள்ளது.

'ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. வரும் மார்ச் 10 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவுள்ள நிலையில் தற்போது, டீசரை வெளியிட்டிருக்கிறது படக்குழு. கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ‘காப்பான்’ படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் வெளியாகும் அதிரடி ஆக்‌ஷன் திரைப்படம் ‘எதற்கும் துணிந்தவன்’ என்பதை டீசர் முழுக்க வரும் ஆக்‌ஷன் காட்சிகள் உணர்த்துகின்றன.

ஏற்கனவே, படம் பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படுகிறது என்று தகவல் வெளியானது. அதனை நிரூபிக்கும் விதமாக காட்சிகள் அமைந்துள்ளன. வில்லன் இன்பாவாக வினய் கவனம் ஈர்க்கிறார். பெண்ணைக் காப்பாற்றி ‘என்கூட இருக்கவங்க எப்பவும் பயப்படக்கூடாது. நம்மள யாரும் ஒண்ணும் பண்ண முடியாது’ என்று சூர்யா பேசும் வசனங்களும் கவனம் ஈர்க்கின்றன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com