தள்ளிப்போகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ்?

தள்ளிப்போகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ்?

தள்ளிப்போகும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ ரிலீஸ்?
Published on

சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘ஜெய் பீம்’ வெற்றிக்குப்பிறகு நடிகர் சூர்யா பாண்டிராஜ் இயக்கத்தில் ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். நாயகியாக பிரியங்கா அருள்மோகன் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி ’எதற்கும் துணிந்தவன்’ தியேட்டர்களில் வெளியாகவிருந்த நிலையில், கொரோனா பரவலின் காரணமாக, படக்குழு படத்தினை பிப்ரவரி இறுதியில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தினை கடந்தும் தமிழகத்தில் 23 ஆயிரத்தை கடந்தும் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சமீபத்தில் தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதிக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனையெல்லாம் கருத்தில்கொண்டு படக்குழுவினர் படத்தினை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. நேற்று இப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே, ‘ஆர்ஆர்ஆர்’,’வலிமை’,’ராதே ஷ்யாம்’ உள்ளிட்டப் படங்களும் ஒத்திவைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com