பாடல் காட்சிக்காக கோவா செல்லும் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழு
பாடல் காட்சிக்காக சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழு கோவா செல்ல திட்டமிட்டிருக்கிறது.
சூர்யா நடிப்பில் வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘ஜெய் பீம்’ வெளியாகவிருக்கிறது. இப்படம் வெளியானவுடன் சூர்யா- பிரியங்கா மோகன் நடிக்கும் ‘எதற்கும் துணிந்தவன்’ படக்குழு அடுத்தவாரம் கோவா செல்ல திட்டமிட்டுள்ளனர்.
'சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’எதற்கும் துணிந்தவன்’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண், நடிகை ராதிகா உட்பட பல நடிகர்கள் நடிக்கிறார்கள்.
வில்லனாக வினய் நடிக்கிறார். இமான் இசையமைக்கிறார். படத்தில் இன்னும் இரண்டு பாடல்கள் மட்டும் எடுக்கப்படவுள்ளன. ஒரு பாடல் கோவாவிலும் மற்றொரு பாடல் சென்னையிலும் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். இதில், கோவாவில் நடைபெறும் பாடலை படமாக்க படக்குழு அடுத்தவாரம் ‘ஜெய் பீம்’ வெளியானபிறகு கோவா செல்ல திட்டமிட்டுள்ளனர். படம், டிசம்பர் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.