ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த 250 ரசிகர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி அளித்த சூர்யா

ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த 250 ரசிகர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி அளித்த சூர்யா
ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்த 250 ரசிகர்களுக்கு தலா ரூ.5000 நிதியுதவி அளித்த சூர்யா

கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமிழந்த தனது ரசிகர் மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு நடிகர் சூர்யா நிதியுதவி வழங்கியுள்ளார்.

தனது அகரம் ஃபவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களுக்கு இலவசக் கல்வி அளித்து உதவிக்கரம் நீட்டி வரும் சூர்யா, தனது படங்களின் மூலம் கிடைக்கும் வருவாய்யில் பொது சமூகத்தினருக்கும் பல்வேறு உதவிகளை செய்கிறார். கடந்த ஆண்டு ’சூரரைப் போற்று’ வெளியீட்டுத் தொகையில் 5 கோடி ரூபாயை பொதுமக்களுக்கும் திரையுலகைச் சார்ந்தவர்களுக்கும் கொரோனா களத்தில் முன்னின்று பணியாற்றும் முன்களப் பணியாளர்களுக்கும் பகிர்ந்தளித்தார். இந்த வருடம் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரமின்றித் தவித்த தனது ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 250 ரசிகர்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளார். இதனை, சூர்யாவின் ‘2டி’ என்டெர்டைன்மெண்ட் நிறுவனமும் நாம் தொடர்புகொண்டு கேட்டதற்கு உறுதி செய்தது.

தமிழகத்தில் ரசிகர்கள்தான், நடிகர்கள் சார்பில் செலவு செய்து உணவு, மளிகைப்பொருட்களை ஏழை மக்களுக்கு வழங்கி வருகிறார்கள். ஆனால், சூர்யாவோ ரசிகர்களின் துயரத்தில் பங்கேற்றுள்ளார். நடிகர் சூர்யாவின் இந்த செயல் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com