\
அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா - ’சிறுத்தை’ சிவா படத்தின் படப்பிடிப்பு

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா - ’சிறுத்தை’ சிவா படத்தின் படப்பிடிப்பு

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா - ’சிறுத்தை’ சிவா படத்தின் படப்பிடிப்பு
Published on

சூர்யா நடிப்பில் சிவா இயக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

சிறுத்தை, வீரம், வேதாளம், விஸ்வாசம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் சிவா. இவர் விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் புதிய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த சமயத்தில் அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதனால் சூர்யா படத்திற்கு முன் அண்ணாத்த படத்தை இயக்கினார். தற்போது அதற்கான வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன.

இதனால் சிவா விரைவில் சூர்யா படத்திற்கான வேலைகளை தொடங்கவுள்ளார். மேலும் பிப்ரவரி மாதம் அதற்கான படப்பிடிப்பு தொடங்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com