பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா-பாலா படத்தின் படப்பிடிப்பு

பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா-பாலா படத்தின் படப்பிடிப்பு

பிப்ரவரியில் தொடங்கும் சூர்யா-பாலா படத்தின் படப்பிடிப்பு
Published on

சூர்யா - பாலா இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்கவிருக்கிறது.

சூர்யா - பாலா மூன்றாவது முறையாக புதிய படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்தின், அறிவிப்பு அதிகாரபூர்வமாக நடிகர் சிவக்குமார் பிறந்தநாளையொட்டி வெளியானது. துருவ் விக்ரமின் ‘வர்மா’ படத்திற்குப் பிறகு பாலா இப்படத்தை இயக்குகிறார். ‘எதற்கும் துணிந்தவன்’ படப்பிடிப்பை நிறைவு செய்துள்ள சூர்யா வரும் பிப்ரவரி முதல் வாரத்தில் பாலாவுடன் இணையவுள்ளார். நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்காக, சூர்யா 60 நாட்கள் வரை கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் என்று சொல்லப்படுகிறது.

ஏற்கெனவே,  பாலா இயக்கத்தில் ‘நந்தா’, ‘பிதாமகன்’ உள்ளிட்டப் படங்களில் சூர்யா நடித்துள்ளார். பாலாவின் ‘அவன் இவன்’ படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ஹாட்ரிக் வெற்றி கொடுப்பார்களா என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com