”எதற்கும் துணிந்தவன்”: சூர்யா - பாண்டிராஜ் படத்தின் தலைப்பு அறிவிப்பு

”எதற்கும் துணிந்தவன்”: சூர்யா - பாண்டிராஜ் படத்தின் தலைப்பு அறிவிப்பு

”எதற்கும் துணிந்தவன்”: சூர்யா - பாண்டிராஜ் படத்தின் தலைப்பு அறிவிப்பு
Published on

’சூர்யா 40’படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியாகி இருக்கிறது.

’சூரரைப் போற்று’ பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் ’சூர்யா 40’ படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சத்யராஜ், ராஜ்கிரண் உட்பட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

சமீபத்தில் இப்படத்தின் சூர்யா புகைப்படங்கள் வெளியாகி கவனம் ஈர்த்தன. சூர்யா ரசிகர்களும் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட் கேட்டு இயக்குநர் பாண்டிராஜிடம் கோரிக்கை வைத்துக்கொண்டே வந்தனர்.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை எதிர்பார்த்திருந்த நிலையில், சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இன்று ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் டைட்டிலும் வெளியாகி இருக்கிறது. “எதற்கும் துணிந்தவன்” என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் தலைப்புக்கேற்ப ஃபர்ஸ்ட் லுக் டீசரில் சூர்யா கெத்தாக நீண்ட வாளை சுழற்றுகிறார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com